‘‘பி.காம் படிக்கையில் இரண்டாம் ஆண்டில் என்னையும் அறியாம புகைப்படக் கலையில் ஆர்வம் வந்தது. படிப்படியா கத்துக்கிட்டேன். படிச்சு முடிச்சு வேலைக்குப் போய், அதுல சம்பாதிச்ச காசுல சொந்தமா ஒரு கேமராவை வாங்கினேன். அந்த சமயத்துல, ‘புகைப்படக்கலைதான் தான் எனக்கான பாதை' என்று முடிவு செஞ்சேன். வேலையை விட்டுட்டு மாஸ் கம்யூனிகேஷன் படிக்க ஆரம்பிச்சேன்'' என்கிறார் பிரசாந்த் சுவாமிநாதன்.
இவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நடத்திய தேசிய அளவிலான ஒளிப்படப் போட்டியில் 2016ம் ஆண்டுக்கான ‘நேஷனல் அமெச்சூர் போட்டோகிராஃபி அவார்ட், ஸ்பெஷல் மென்ஷன்' எனப்படும் ‘தேசிய தன்னார்வ ஒளிப்படத்திற்கான' விருதினைப் பெற்றுள்ளார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் தொடர்பியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு படித்துவரும் பிரசாந்த், விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடைபெற்ற ‘கூத்தாண்டவர் திருநங்கை திருவிழா'வை ஆவணப்படுத்தி எடுத்துள்ள ஒளிப்படங்களுக்காகத் தேசிய விருது. இத்துடன் அவர் எடுத்த வேறு சில படங்களும் உங்கள் பார்வைக்காக.
ஏப்ரல், 2016.